Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2900 Likes :
Ingredients
பச்சரிசி மாவு 500 கிராம்
கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
எள்ளு 50 கிராம்
சீரகம் 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உரித்த பட்டாணி 25 கிராம்
பெருங்காயத்தூள் 2 சிட்டிகை
மஞ்சள்தூள்அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
பச்சரிசி மாவு, எள்ளு, கடலைப்பருப்பு, பட்டாணி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
உருண்டைகளை வட்டமாக செய்து கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, இதன் மீது வட்டத்தைப் போட்டு 5 துளைகள் போடவும்.
துளைகளில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
வட்டம் பொன் நிறமாக சிவந்ததும், திருப்பிப் போடவும்.