கோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 9810
Likes :

Preparation Method

  • கோழி லெக்பீஸ், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • சோம்பை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூளாக்கியது போட்டு, மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறவும்.
  • தண்ணீர் பதம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து கிளறவும்.
  • அதன்பின் சோம்புத்தூள் சேர்த்து தொடர்ந்து கிளறி வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின் தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அனைத்தும் கலந்து நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி குழைய, மென்மையாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை மிளகாய் போட்டு கிளறவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள கோழி லெக்பீஸை போட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேங்காய் அரைத்தது போட்டு கிளறவும்.
  • உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • கோழி லெக்பீஸ், குழம்புடன் கலந்து கிளறியபின் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA