சிக்கன் சூப் வித் கலாங்கல் (மா இஞ்சி)

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2556
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக், பாதி அளவு தேங்காய்ப்பால், கோழிக்கறித் துண்டுகள் இவற்றைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • அதன்பின் மா இஞ்சி, லெமன் க்ராஸ், பூண்டு, மிளகுத்தூள், போட்டுக் கிளறவும்.
  • கோழிக்கறித்துண்டுகள் மிருதுவாக வேகும் வரை (சுமார் 15 நிமிடங்கள்) கொதிக்க விடவும்.
  • 5 நிமிடங்கள் ஆனதும் அதன்பின் காளான் போட்டு, மீதமுள்ள தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இறக்கி வைத்ததும் ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, நார்த்தங்காய் இலை, வெங்காயத்தாள், மிளகாய் துண்டுகள், கொத்தமல்லி இலை, ஏலக்காய்த்தூள் இவற்றை சேர்த்து, கலந்து சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA