Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 13467 Likes :
Ingredients
பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மைதாமாவு 3 மேஜைக்கரண்டி
ரவை 1 கப்
பேக்கிங் ஸோடா 3 சிட்டிகை
உப்புத்தூள் தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
பானி தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
புளிக்கரைசல் 2 கப்
வறுத்த சீரகப்பொடி 2 மேஜைக்கரண்டி
வறுக்காத சீரகப்பொடி 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை அரை கப்
பச்சை மிளகாய் 3
புதினா இலை 1 கப்
கறுப்பு உப்பு (Black Salt) 1 மேஜைக்கரண்டி
வெல்லத்தூள் 2 மேஜைக்கரண்டி
பூரணம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 2
உலர்ந்த வெள்ளை பட்டாணி அரை கப்
பச்சை சட்னி தேவையான அளவு
புளி சட்னி தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
பச்சை சட்னி செய்வதற்கு:
கொத்தமல்லி 2 கட்டு
புதினா 1 கட்டு
பச்சை மிளகாய் 3
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
இஞ்சி அரை அங்குலம்
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
புளி சட்னி செய்வதற்கு:
புளி 1 எலுமிச்சை அளவு
பனை வெல்லாம் 3 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் 3 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
Preparation Method
பூரி செய்முறை:
மைதாமாவு, ரவை, பேக்கிங் ஸோடா, உப்புத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவில் சிறு உருண்டைகள் செய்து, லேஸாக மைதாமாவு தூவி, உருண்டைகளை வட்ட வடிவமாகத் தேய்த்துக் கொள்ளவும். சீரான வட்ட வடிவம் கிடைப்பதற்கு ஏதேனும் பாட்டில் மூடி அல்லது டப்பாவின் மூடியை பயன்படுத்தலாம்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள வட்டங்களை எண்ணெய்யில் போட்டு (Deep Fry) பொரித்து எடுத்து வைக்கவும
பானி செய்முறை:
கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
புளிக்கரைசலுடன் அரைத்த பொருட்கள், வறுத்த சீரகப்பொடி, வறுக்காத சீரகப்பொடி, கறுப்பு உப்பு, வெல்லத்தூள் இவற்றை நன்றாக கலந்து, உப்பு சரிபார்த்தபின் வடிகட்டிக் கொள்ளவும்.
பூரணம் செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, கரகரப்பாக மசித்துக் கொள்ளவும்.
பட்டாணியை ஊற வைத்து, வேக வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கரகரப்பாக அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்புத்தூள் கலந்து தனியே வைக்கவும்.
பச்சை சட்னி செய்முறை:
கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், சர்க்கரை, இஞ்சி, உப்பு இவற்றை அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். பச்சை சட்னி தயார்.
புளி சட்னி செய்முறை:
புளி, பனை வெல்லம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும். புளி சட்னி தயார்.
பானிபூரி செய்முறை:
ஒவ்வொரு பூரியிலும் ஒரு துளை போட்டு இதனுள் சிறிதளவு பூரணம், சிறிதளவு பச்சை சட்னி, புளி சட்னி வைத்து, சிறிதளவு பானி ஊற்றி பரிமாறவும்.