மட்டன் மஸாலா குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 9137
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தனியாத்தூள் இவற்றை வதக்கி, அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கி, கறியைப் போட்டு வதக்கவும்.
  • 10 நிமிடங்கள் வதக்கியபின் கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • கறி வெந்து, குழம்பு ரெடியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA