மைசூர் மஸாலா தோசை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 3 மணிநேரம் 30 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 6 நிமிடங்கள்
Hits   : 6973
Likes :

Preparation Method

  • பச்சரிசி, வெந்தயம், உளுந்து, துவரம்பருப்பு இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.
  • அவலை தனியாக ஊற வைக்கவும்.
  • 3 மணி நேரம் கழித்து, உப்பு சேர்த்து அனைத்தையும் கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • மறுநாள் காலையில் மாவுடன் ரவை சேர்த்து கிளறவும்.
  • மஸாலா தயாரிப்பு முறை:
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, உப்பு சேர்த்து லேஸாக மசித்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் வைக்கவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
  • கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், மிளகாய், உப்பு சேர்த்து, சட்னி அரைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவில் இருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.  தோசை சிவந்ததும் சட்னியை பரவலாக தடவவும்.
  • சிறிதளவு உருளைக்கிழங்கு மஸாலாவை சட்னி மீது தடவி, 1 தேக்கரண்டி வெண்ணெய் வைத்து, மடித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA