காளான் வறுவல்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10970
Likes :

Preparation Method

  • காளானைக் கழுவி, காளானுடன் 2 சிட்டிகை உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து புரட்டி வைத்து, 2 நிமிடங்கள் ஆனதும் மறுபடியும் கழுவிக் கொள்ளவும்.
  • காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் போட்டு லேஸாக வதக்கவும்.
  • காளானைப் போட்டு வதக்கவும்.
  • குடமிளகாய் போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உப்பு போட்டு வதக்கவும்.
  • வதங்கியபின் சீரகத்தூள் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA