உருளைக்கிழங்கு மஞ்சுரியன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3227
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை குழையாமல் வேக வைத்து, தோல் நீக்கி, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சோளமாவு, தண்ணீர், சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து வைக்கவும்.
  • இதை சோளமாவுக் கலவையில் போட்டுப் புரட்டி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • Non—Stick—Pan—ல் அல்லது அகன்ற வாணலியில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சிபூண்டு அரைத்ததைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கியபின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • சிகப்பு மிளகாய் ஸாஸ் (Red Chilli Sauce), ஸோயா ஸாஸ், தக்காளி ஸாஸ், சர்க்கரை, 2 தேக்கரண்டி எண்ணெய் இவற்றை சேர்த்துக் கிளறவும்.
  • நன்றாக வதங்கியதும் இறக்கி, மாலை நேர சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.
                        *கடைகளில் விற்கப்படும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் வாங்கி, இதே முறையில் மஞ்சுரியன் தயாரிக்கலாம்.

  *பூண்டை நறுக்காமல் நசுக்கிப் போடவும்.

Engineered By ZITIMA