Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள் அவன்—ஐ (Oven) 375° F—ல் முன் கூட்டி
Hits : 8047 Likes :
Ingredients
மைதாமாவு 180 கிராம்
வெண்ணெய் 120 கிராம்
சர்க்கரை 150 கிராம்
முட்டை 3
கொக்கோ பவுடர் 30 கிராம்
பேக்கிங் பவுடர் (Baking Powder) 3 தேக்கரண்டி
Preparation Method
மைதாமாவுடன் பேக்கிங்பவுடர், கொக்கோ பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெய்யையும், சர்க்கரையையும் மரக்கரண்டியினால் நன்றாக அடித்துக் கொள்ளவும். மிக்ஸியிலும் போட்டு அடித்துக் கொள்ளலாம்.
அதன்பின் வெண்ணெய் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மைதாமாவு கலவையை சேர்த்து, ஒரே பக்கமாக லேஸாக கிளறி, கலந்து விடவும்.
கேக், வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மைதாமாவு தூவி, அதன்பின் கேக் கலவையை போட்டு சமமாக தட்டியபின், முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) சுமார் நாற்பது நிமிடங்கள் வைத்திருந்து, வெந்தது பார்த்து எடுத்து பரிமாறவும்.