Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 12916 Likes :
Ingredients
பால் 1 லிட்டர்
சர்க்கரை 250 கிராம் + 2 மேஜைக்கரண்டி
கஸ்டர்ட் பவுடர் (Custard Powder) 1 மேஜைக்கரண்டி
வெனிலா எஸென்ஸ் 4 சொட்டுகள்
முட்டை 6
Preparation Method
பாலை காய்ச்சி முக்கால் லிட்டராக வற்ற வைத்து இறக்கிக் கொள்ளவும்.
இறக்கி வைத்துள்ள பாலுடன் சர்க்கரை போட்டுக் கலந்து விடவும்.
1 மேஜைக்கரண்டி ஆறின பாலில் 1 மேஜைக்கரண்டி கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, 3 சொட்டு வெனிலா எஸென்ஸ் ஊற்றி நன்றாக கலந்து, வற்ற வைத்துள்ள பாலுடன் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
இந்த பாலுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி சூடேற்றி, 2 மேஜைக்கரண்டி சர்க்கரை போட்டு அது சிவந்து கருவலாக பொங்கி வரும் சமயம் பாத்திரத்தில் மேல்பக்கம் இடுக்கியால் பிடித்து, ஜீரா பாத்திரத்தின் எல்லா இடமும் படும்படி சுழற்றி பரப்பி விடவும்.
இதில் பால் கலவையை ஊற்றிக் கொள்ளவும். மேல்பக்கம் Foil பேப்பரினால் மூடிக்கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதனுள் பால் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி சுமார் 30 நிமிடங்கள் வேக வைத்து, ஆறியபின் Fridge—ல் வைத்து குளிரச் செய்து எடுத்து பரிமாறவும்.