மிக்ஸ் ஃப்ருட் புட்டிங்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 6097
Likes :

Preparation Method

  • 1 கப் தண்ணீரில் சைனா க்ராஸ்ஸை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 1 கப் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து சூடாக்கி இளம்பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  • மீதமுள்ள சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.
  • பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • சர்க்கரை பாகுடன் ஆப்பிள் துண்டுகள், மற்றும் சாத்துக்குடி சுளைகளைப் போட்டு, பழங்கள் வெந்ததும் பேரீச்சம் பழத்தைப் போடவும்.
  • அதன்பின் ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • கன்டென்ஸ்ட் மில்க்குடன் தூளாக்கியுள்ள சர்க்கரை போட்டு கலந்து, 1 மணி நேரம் தனியே வைக்கவும்.
  • அதன்பிறகு, கன்டென்ஸ்ட் மில்க் கலவையுடன் பால் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறி விடவும். (கொதிக்க விடக் கூடாது.) அதன்பின் இறக்கி வைக்கவும்.
  • வேறொரு பாத்திரத்தில் (Pan) சைனா க்ராஸ் கலவையை லேஸாக சூடேற்றி, கட்டி இல்லாமல் மிக கவனமாகவும், மெதுவாகவும் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கன்டென்ஸ்ட் மில்க் கலவை ஓரளவு ஆறியதும் சைனா க்ராஸ்ஸை மில்க் கலவை மீது ஊற்றவும்.
  • 20 நிமிடங்கள் ஆனபின் அன்னாசிப்பழத் துண்டுகள் பரவலாக போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சர்க்கரைப்பாகுபழக்கலவையை ஊற்றி சிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்ல் குளிர வைத்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA