மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8419
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், தனியாத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • மீன் குழம்பு சட்டியில் (மண் சட்டியில் தயாரித்தால் சுவை கூடும்) இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகயை, தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்த மஸாலா போட்டு 5 நிமிடங்கள் வதக்கியதும், புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  • குழம்பு ஓரளவு கெட்டியானதும் மீன் துண்டுகள் போட்டு, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA