Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 18917 Likes :
Ingredients
கொத்துக்கறி 500 கிராம் பெரிய வெங்காயம் 1 தனியாத்தூள் 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி தேங்காய் 1 மூடி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கொத்துக்கறியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துறுவி, 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
வேக வைத்துள்ள கொத்துக்கறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
கொத்துக்கறி வேக வைத்த தண்ணீருடன் ஊற்றலாம்.
தேங்காய்ப்பால் ஊற்றி, கொதிக்க விடவும்.
உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.