உருளைக்கிழங்கு—பட்டாணி மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 1137
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • துறுவிய தேங்காயை ½ கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் லேஸாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி குழைவாக வெந்ததும் இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கி, பட்டாணி போட்டு பட்டாணி வேகும் வரை வதக்கவும்.
  • அதன்பின் தேங்காய்ப்பால் ஊற்றி, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் இவற்றை சேர்த்து கிளறி உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் உருளைக்கிழங்கு துண்டுகள் போடவும்.
  • மஸாலா முழுவதும் கலந்து, கெட்டியானதும் கரகரப்பான மிளகுத்தூள், வறுத்த சோம்புத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA