Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 1 பரோட்டாவிற்கு 7 நிமிடங்கள்
Hits : 7179 Likes :
Ingredients
மைதாமாவு 4 கப்
புதினா 2 கப்
பச்சை மிளகாய் 4
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
புதினாவை நறுக்கிக் கொள்ளவும்.
மைதாமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர், புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை கலந்து, சற்று தளர்த்தியாக பிசைந்து, 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து மூடி 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அதன்பின், மாவை உருண்டைகளாக செய்து பூரிப்பலகை மீது வைத்து விரல்களால் தட்டி, பலகை அளவு இழுத்து விரிக்கவும்.
விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாக தட்டிக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.
சுற்றிலும் சிறிது இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுக்கவும்.
இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரித்து, பரிமாறவும்.