உருளைக்கிழங்கு கட்லெட்

Spread The Taste
Serves
7 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10489
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து ஆறியதும் தோல் நீக்கி, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி இறக்கி, உருளைக்கிழங்கு மசித்து வைத்ததுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • கிளறியபின், கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்களைப் ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறவும்.
Engineered By ZITIMA