உருளைக்கிழங்கு ஸ்டூ

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6963
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, ஆட்டி முதல் பால் 250 மில்லி லிட்டர் எடுத்து தனியாக வைக்கவும்.
  • இரண்டாவது முறை பால் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளுடன் பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் (முழுதாக) கோட்டுக் கொள்ளவும்.
  • 5 நிமிடங்கள் வதங்கிய பிறகு, இரண்டாவது முறை எடுத்த தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகள் வெந்து, கெட்டியானதும் நெய், முதலில் எடுத்த தேங்காய்ப்பால், கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு இவற்றை சேர்த்து இறக்கி மூடி வைத்து, தேவையான போது பரிமாறவும்.
Engineered By ZITIMA