பாவ் பாஜி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 14830
Likes :

Preparation Method

  • பட்டாணி, காலிஃப்ளவர் இவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை தனியாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தனியே வைக்கவும்.
  • மீதமுள்ள 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தனியே வைக்கவும்.
  • பச்சை மிளகாய், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி வெண்ணெய், போட்டு லேஸாக உருகியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் குடமிளகாய் துண்டுகள் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும்.
  • குடமிளகாய் வதங்கியதும் தக்காளி போட்டு குழைவாக ஆகும்வரை வதக்கவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், பாவ்பாஜி மஸாலா பவுடர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • இப்போது வேக வைத்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கசூரி மேத்தி போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பாவ் பன்னை நீள வசமாக நறுக்கிக் (துண்டுகள் ஆகக்கூடாது) கொள்ளவும்.
  • வேறு வாணலியில் தேவையான அளவு வெண்ணெய் போட்டு பாவ்—பன்னை லேஸாக வறுக்கவும்.
  • சுற்றிலும் சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.
  • வறுபட்ட பாவ் பன்களை ஒரு தட்டில் எடுத்து தட்டின் ஓரத்தில் காய்கறி மஸாலாவை வைத்து, நறுக்கிய எலுமிச்சம்பழத் துண்டு, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA