பானி பூரி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 13883
Likes :

Preparation Method

பூரி செய்முறை:

  • மைதாமாவு, ரவை, பேக்கிங் ஸோடா, உப்புத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறு உருண்டைகள் செய்து, லேஸாக மைதாமாவு தூவி, உருண்டைகளை வட்ட வடிவமாகத் தேய்த்துக் கொள்ளவும். சீரான வட்ட வடிவம் கிடைப்பதற்கு ஏதேனும் பாட்டில் மூடி அல்லது டப்பாவின் மூடியை பயன்படுத்தலாம்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள வட்டங்களை எண்ணெய்யில் போட்டு (Deep Fry) பொரித்து எடுத்து வைக்கவும

பானி செய்முறை:

  • கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் அரைத்த பொருட்கள், வறுத்த சீரகப்பொடி, வறுக்காத சீரகப்பொடி, கறுப்பு உப்பு, வெல்லத்தூள் இவற்றை நன்றாக கலந்து, உப்பு சரிபார்த்தபின் வடிகட்டிக் கொள்ளவும்.


பூரணம் செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேக வைத்து, கரகரப்பாக மசித்துக் கொள்ளவும்.
  • பட்டாணியை ஊற வைத்து, வேக வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கரகரப்பாக அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்புத்தூள் கலந்து தனியே வைக்கவும்.

பச்சை சட்னி செய்முறை:

  • கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், சர்க்கரை, இஞ்சி, உப்பு இவற்றை அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். பச்சை சட்னி தயார்.


புளி சட்னி செய்முறை:

  • புளி, பனை வெல்லம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும். புளி சட்னி தயார்.

பானிபூரி செய்முறை:

  • ஒவ்வொரு பூரியிலும் ஒரு துளை போட்டு இதனுள் சிறிதளவு பூரணம், சிறிதளவு பச்சை சட்னி, புளி சட்னி வைத்து, சிறிதளவு பானி ஊற்றி பரிமாறவும்.

 

You Might Also Like

Engineered By ZITIMA