Preparation Time: 5 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 22219 Likes :
Ingredients
புதினா 1 கட்டு
கொத்தமல்லி 2 மேஜைக்கரண்டி
சிகப்பு மிளகாய் 3
புளி 1 கோலி அளவு
பூண்டு 3 பல்
இஞ்சி அரை அங்குலம்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ½ தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து மிளகாய், கொத்தமல்லி, புதினா, புளி, பூண்டு, இஞ்சி இவற்றைப் போட்டு வதக்கி, இறக்கி வைக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத் தாளித்து அரைத்த புதினா கலவையைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கி, இறக்கி பரிமாறவும்.