Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 13016 Likes :
Ingredients
பீர்க்கங்காய் தோல் (நறுக்கியது) 2 கப்
சின்ன வெங்காயம் 50 கிராம்
பூண்டு 5 பல்
இஞ்சி 1 அங்குலம்
புளி 1 கோலி அளவு
சிகப்பு மிளகாய் 6
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 3 சிட்டிகை
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
பீர்க்கங்காய் பொரியல் செய்யும் அன்று கிடைக்கும் பீர்க்கங்காய் தோலில் இந்த சட்னி தயாரிக்கலாம்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள், புளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி இவற்றைப் போட்டு வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
பீர்க்கங்காய் தோலுடன் வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த பீர்க்கங்காய் தோல் கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.