கேரமல் கஸ்டர்ட்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 12329
Likes :

Preparation Method

  • பாலை காய்ச்சி முக்கால் லிட்டராக வற்ற வைத்து இறக்கிக் கொள்ளவும்.
  • இறக்கி வைத்துள்ள பாலுடன் சர்க்கரை போட்டுக் கலந்து விடவும்.
  • 1 மேஜைக்கரண்டி ஆறின பாலில் 1 மேஜைக்கரண்டி கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, 3 சொட்டு வெனிலா எஸென்ஸ் ஊற்றி நன்றாக கலந்து, வற்ற வைத்துள்ள பாலுடன் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
  • இந்த பாலுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி சூடேற்றி, 2 மேஜைக்கரண்டி சர்க்கரை போட்டு அது சிவந்து கருவலாக பொங்கி வரும் சமயம் பாத்திரத்தில் மேல்பக்கம் இடுக்கியால் பிடித்து, ஜீரா பாத்திரத்தின் எல்லா இடமும் படும்படி சுழற்றி பரப்பி விடவும்.
  • இதில் பால் கலவையை ஊற்றிக் கொள்ளவும். மேல்பக்கம் Foil பேப்பரினால் மூடிக்கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதனுள் பால் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி சுமார் 30 நிமிடங்கள் வேக வைத்து, ஆறியபின் Fridge—ல் வைத்து குளிரச் செய்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA