காஞ்சிபுரம் இட்லி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8390
Likes :

Preparation Method

  • புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக கலந்து, தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை தனியாக தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகம் மற்றும் மிளகை ஒன்றிரண்டான தூளாக்கிக் கொள்ளவும்.
  • அரிசி வகைகளை தனியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • உளுந்தை தனியாக ஆட்டி, மற்றும் அரிசி மாவு, உளுந்து மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு மற்றும் சுக்குப்பொடி சேர்த்து மூடி வைக்கவும். (இரவில் ஆட்டி வைத்து காலையில் தயாரிக்கலாம்.)
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தூளாக்கிய மிளகு, சீரகம், சுக்குப்பொடி, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வறுத்து மாவுடன் கலந்து கிளறிக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவியபின் மாவை ஊற்றி, வேக வைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
Engineered By ZITIMA