திருநெல்வேலி அல்வா

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 7523
Likes :

Preparation Method

 • கோதுமையை முன்தின இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஆட்டி, கோதுமைப்பால் எடுத்துக் கொள்ளவும்.
 • இதுபோல இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ளவும்.
 • இரண்டு முறை எடுத்த பாலை ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
 • சில நிமிடங்களில் கோதுமைப்பாலின் மீது தண்ணீர் தெளிந்து இருக்கும்.
 • அடியில் கெட்டியான கோதுமைப்பால் தேங்கி இருக்கும்.
 • மேலே உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு கெட்டி கோதுமைப் பாலை, அடி கனமான பாத்திரம் அல்லது கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதித்ததும் ஏலக்காய் பொடி, கேசரி கலர் பொடி, சிகப்பு கலர், ஆரஞ்சு கலர், குங்குமப்பூ இவற்றைப் போடவும்.
 • அதன்பின் கோதுமை பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் சேர்க்கவும். பாதாம்பருப்பு, பிஸ்தா சேர்க்கவும்.
 • மிதமான தீயில் வைத்து கிளறவும்.
 • ஊற்றிய நெய் மிதந்து வரும்.
 • நெய் மிதக்க, அல்வா தயாரானதும் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.
 • இந்த பக்குவத்தில் முந்திரிப்பருப்பைப் போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA