முட்டை கெபாப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3803
Likes :

Preparation Method

  • 2 முட்டையை வேக வைத்து, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஃப்ரெஷ் க்ரிம், தயிர், கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், புதினா இலை, கொத்தமல்லி இலை, மைதா மாவு, உப்புத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையை முட்டை துண்டுகள் முழுவதும் படும்படி தடவி வைக்கவும். (தேவைப்பட்டால் கலவையில் மைதா மாவு மேலும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.)
  • இன்னொரு முட்டையை சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து முட்டைத் துண்டுகள் மீது ஊற்றவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், முட்டையின் வெண்மைப் பகுதி தோசைக்கல்லில் படும்படி வைத்து வறுக்கவும்.
  • சிறிதளவு முட்டை கலவையை வறுபட்டுக் கொண்டிருக்கும் முட்டைகள் மீது ஊற்றவும்.
  • முட்டைகளின் மறுபக்கம் திருப்பிப் போட்டு மீதமுள்ள முட்டைக் கலவையை ஊற்றவும்.
  • நன்றாக வறுபட்டதும் முட்டை கெபாப்களை எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA