ஜம்போ ஆம்லெட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 6768
Likes :

Preparation Method

  • ஒரு பாத்திரத்தில் (Bowl) முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  • உப்பு, மிளகாய்த்தூள் கலந்து நன்றாக அடித்து, தனியே வைக்கவும்.
  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வேக வைத்து, மிகவும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கி அதன்பின் கோழிக்கறியைப் போட்டு லேஸாக வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி கலவையிலிருந்து சிறிதளவு போட்டு, இதன் மீது முட்டையிலிருந்து சிறிதளவு பரவலாக ஊற்றவும்.
  • சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • மீதமுள்ள கோழிக்கறியிலும், முட்டையிலும் இது போல ஜம்போ ஆம்லெட்கள் தயாரிக்கலாம்.
  • மீன், எறா, நண்டின் சதைப்பகுதி இவற்றிலும் தயாரிக்கலாம்.
Engineered By ZITIMA