முட்டை ஆம்லெட் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10358
Likes :

Preparation Method

  • முட்டையுடன் உப்புத்தூள் கலந்து, அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து காய்ந்ததும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு வதக்கவும் அதன்பின் முட்டைக் கலவையை ஊற்றி, ஆம்லெட் செய்து கொள்ளவும்.
  • கலக்கி வைத்துள்ள முட்டை கலவை முழுவதையும் ஆம்லெட் செய்து, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய், சீரகம், தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகலமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கி, சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • குழம்பு கெட்டியானதும், ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA