Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 11544 Likes :
Ingredients
சுத்தம் செய்த மீன் துண்டுகள் 500 கிராம்
முட்டை 1
கடுகு பேஸ்ட் (Mustard Paste) 1 தேக்கரண்டி
சீஸ் துறுவல் 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
பார்ஸ்லி அரை தேக்கரண்டி
நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
ஒரு கிண்ணத்தில் (Bowl) சீஸ் துறுவல், முட்டையில் பாதி அளவு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பார்ஸ்லி, எலுமிச்சைச்சாறு, கடுகு பேஸ்ட், உப்புத்தூள் இவற்றை எடுத்துக் கொள்ளவும்.
மேற்கூறிய கலவையுடன் மீன் துண்டுகளைப் போட்டுப் புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
முட்டையை Egg Beater — கொண்டு அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கார்ன் ஃப்ளேக்சுடன் மீன் துண்டுகளைப் போட்டு (ஒவ்வொன்றாக) பொரித்து எடுத்து பரிமாறவும்.