கடம்பூர் போளி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 12538
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் கலர் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.
  • 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் நன்றாக பிசைந்து 3 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • கடலைப்பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும்.
  • அதன்பின் தண்ணீரை வடித்துவிட்டு கடலைப்பருப்புடன் வெல்லத்தூள், ஏலக்காய் பொடி சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பு கலவையில் உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • மைதா மாவில் சிறிதளவு எடுத்து, பூரிப்பலகையில் வைத்து இதயம் நல்லெண்ணெய் தடவி, அதில் வைத்து லேஸாக விரித்து, இதன் நடுவில் கடலைப்பருப்பு உருண்டையை வைத்து, மாவை இழுத்து உருண்டையை மூடி மெதுவாக, மறுபடியும் வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லைக் காய வைத்து, சிறிதளவு நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள போளியை போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA