வேலூர் கறி வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 14035
Likes :

Preparation Method

  • கறி மிகவும் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.
  • கறியுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் பூண்டை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சோம்பு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறியபின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
  • அரைத்து வைத்துள்ள சோம்பு — சீரகக் கலவை, மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • கறி வெந்து, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA