கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 3 மணி நேரம் 30 நிமிடங்கள்
Cooking Time: 1 ஹௌர்
Hits   : 6561
Likes :

Preparation Method

ஸேண்ட்விச் மஸாலா செய்முறை:
  • கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கொத்துக்கறியைப் போட்டு கிளறவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
  • கொத்துக்கறி நன்றாக வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இட்லி ஸேண்ட்விச் செய்முறை:
  • ஊற வைத்துள்ள அரிசியை சற்று கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, 2 மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில் இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • மாவிலிருந்து சிறிதளவு எடுத்து இட்லி தட்டில் ஊற்றி இதன் மீது கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வைக்கவும்.
  • மறுபடியும் இதன் மீது இட்லி மாவிலிருந்து சிறிதளவு ஊற்றவும்.
  • இதுபோல எல்லா இட்லி மாவிலும் செய்து, வேக வைத்து, இட்லி ஸேண்ட்விச் தயாரித்து எடுத்து பரிமாறவும்.

Engineered By ZITIMA