Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 8625 Likes :
Ingredients
பனீர் 250 கிராம்
பெரிய வெங்காயம் 4
இஞ்சி 1 அங்குலம்
பூண்டு 6 பல்
பால் 100 மில்லி லிட்டர்
சீரகம் 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 8
பச்சை மிளகாய் 1
கசூரி மேத்தி 2 தேக்கரண்டி
தக்காளி 250 கிராம்
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம் மஸாலாத்தூள் 3 சிட்டிகை
சிகப்பு கலர் பொடி 3 சிட்டிகை
குடமிளகாய் 1
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் 5 மேஜைக்கரண்டி
Preparation Method
பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2 பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதமுள்ள வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேஜைக்கரண்டி வெண்ணெயை போட்டு உருகியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும்.
மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முந்திரிப்பருப்பு அரைத்ததைப் போட்டுக் கிளறவும்.
3 நிமிடங்கள் கொதித்ததும் தக்காளி அரைத்தது, சீரகத்தூள், கரம்மஸாலாத்தூள், சிகப்பு கலர் பொடி, உப்பு இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் ஆனதும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மேலும் 3 நிமிடங்கள் கொதித்ததும் கசூரி மேத்தி சேர்த்து, கிளறி இறக்கி வைக்கவும்.
வேறு வாணலியில் மீதமுற்ற வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் துண்டுகள் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி வைத்துள்ள மஸாலாவுடன் போட்டுக் கிளறவும்.
மறுபடியும் சூடேற்றி, பனீர் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.