பனீர்—தக்காளி மஸாலா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7977
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து, ஆறியபின், தோலை நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் வெண்ணெய் போட்டு, உருகியதும் சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், அரைத்த தக்காளி, வெங்காயம் அரைத்தது இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்க்கவும்.
  • மஸாலா ஓரளவு கெட்டியானதும் பனீர் துண்டுகளைப் போட்டு, கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து, 3 நிமிடங்கள் ஆன பின் கரம்மஸாலாத்தூள், ஃப்ரெஷ் க்ரீம், அரைத்த முந்திரிப்பருப்பு, கொத்தமல்லி இலை இவற்றைப் போட்டு நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA