பனீர் குருமா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7606
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டை, பூண்டு, மிளகு, கசகசா, கொத்தமல்லி இலை, சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்து, பாலுடன் பொரிகடலைத்தூளை கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  • மஸாலா நன்றாக வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதன்பின் அரைத்த முந்திரிப்பருப்பு மற்றும் தயிர் சேர்க்கவும்.
  • குருமா கெட்டியானதும் பனீர் துண்டுகள் போட்டு, பனீர் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA