Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6303 Likes :
Ingredients
ஜவ்வரிசி 1 கப் அரிசி மாவு 2 கப் தயிர் தேவையான அளவு சிகப்பு மிளகாய் 6 கறிவேப்பிலை 2 ஆர்க்கு பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
அரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவுடன் ஜவ்வரிசி, தயிர், உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற விடவும்.
சிகப்பு மிளகாய், கறிவேப்பிலையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, மாவை சிறிதளவு கரண்டியில் எடுத்து சற்று பருமனான தோசையாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.