Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4237 Likes :
Ingredients
பாஸ்மதி அரிசி 500 கிராம்
சிறு துண்டுகளான ஸோயா (Soya granules) 50 கிராம்
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 5
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
பட்டை 2 துண்டு
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
புதினா இலை 2 மேஜைக்கரண்டி
தக்காளி 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
நெய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பாஸ்மதி அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து ஆற விட்டு தனியே வைத்துக் கொள்ளவும்.
ஸோயாவை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஆனபின் வடிகட்டி, குளிர்ந்த தண்ணீர் ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
3 நிமிடங்கள் வதக்கிய பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகாய்த்தூள், கொத்தமல்லி இலை, புதினா இலை, தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.
ஸோயா துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி, நெய் ஊற்றி ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து மெதுவாகக் கிளறி இறக்கி மூடி வைக்கவும்.