சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 13082
Likes :

Preparation Method

வறுத்த நூடுல்ஸ் செய்முறை:

 • வேக வைத்த நூடுல்ஸில், ஈரம் இருக்கக் கூடாது.
 • ஈரத்தை நீக்குவதற்காக மைதா மாவு தூவிக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நூடுல்ஸில் பாதி அளவைப் போட்டு பொன்நிறமாக பொரித்துக் கொள்ளவும்.
 • மீதியுள்ள நூடுல்ஸையும் இது போல் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சைனீஸ் சாப் சுயி செய்முறை:

 • வறுத்த நூடுல்ஸ் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
 • குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தாளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • சோளமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கரைத்துக் கொள்ளவும்.
 • பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கேரட் மற்றும் பீன்ஸைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து விடவும்.
 • அதன்பின் கேரட் மற்றும் பீன்ஸை நறுக்கிக் கொள்ளவும்.
 • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
 • கோழிக்கறி வெந்ததும் வெங்காயத்தாள், கேரட், பீன்ஸ், குடமிளகாய், அஜ்—னு—மோட்டோ, மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றையும் போட்டுக் கிளறவும்.
 • 5 நிமிடங்கள் வதங்கியதும் ஸோயா ஸாஸ் சேர்த்துக் கிளறவும்.
 • 1 நிமிடம் ஆனதும் சோளமாவு கரைசல், வெள்ளை மிளகுத்தூள், ஸோயா ஸாஸ் மற்றும் 5 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறவும்.
 • பரிமாறும் தட்டில் வறுத்த நூடுல்ஸை வைத்து, இதன் மீது கோழிக்கறி, காய்கறி கலவையைப் போட்டு பரிமாறவும்.

 

 

Choose Your Favorite Chinese Recipes

 • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

  View Recipe
 • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

  View Recipe
 • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

  View Recipe
 • சிக்கன் நூடுல்ஸ் சூப்

  View Recipe
 • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

  View Recipe
 • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
Engineered By ZITIMA