Preparation Time: 12 நிமிடங்கள் Cooking Time: 5 நிமிடங்கள்
Hits : 8441 Likes :
Ingredients
பூண்டு 100 கிராம்
மிளகு அரை தேக்கரண்டி
புளி 1 நெல்லிக்காய் அளவு
சிகப்பு மிளகாய் 3
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பூண்டை உரித்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, மிளகாய், புளி, மிளகு, பூண்டு போட்டு வதக்கி இறக்கி, ஆறியபின் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த பூண்டு கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி, இறக்கி பரிமாறவும்.