கடலைப்பருப்பு சுண்டல் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2527
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதக்கியபின் கடலைப்பருப்பு, உப்புத்தூள், தேங்காய்த்துறுவல், சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மாவுடன் உப்புத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு கையில் எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி, நடுவில் கடலைப்பருப்பு சுண்டல் கலவையை சிறிதளவு வைத்து அரை வட்டமாக மடக்கி, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
  • இதுபோல் எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சில கொழுக்கட்டைகளை வைத்து வேக வைக்கவும்.
  • செய்து வைத்த எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA