Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4861 Likes :
Ingredients
கொத்துக்கறி 500 கிராம்
பச்சை பட்டாணி (உரித்தது) 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
தயிர் 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் 2
கறுப்பு ஏலக்காய் 1
பிரியாணி இலை 1
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
பச்சை மிளகாய் 3
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
தனியாத்தூள்அரை தேக்கரண்டி
சீரகத்தூள் 3 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
கொத்துக்கறி தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், பிரியாணி இலை, இவற்றை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
5 நிமிடங்கள் வதக்கியதும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு 3 நிமிடங்கள் வதக்கியபின் கொத்துக்கறி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி, தக்காளி சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியபின் தயிர் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
மூடி வைத்து, கொத்துக்கறி வெந்ததும் பட்டாணி போட்டுக் கிளறவும்.
பட்டாணி வெந்ததும் கரம்மஸாலாத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.