ஹைதராபாத் லோக்மி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6676
Likes :

Preparation Method

  • மைதா மாவுடன் உப்பு, 1 தேக்கரண்டி நெய், வெண்ணெய், சமையல் சோடா சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.

கொத்துக்கறி மஸாலா தயாரிப்பதற்கு:

  • கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, அதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் கொத்துக்கறி போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • கொத்துக்கறி வதங்கியபின் மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், தயிர், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • நன்றாக வதங்கியபின் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மைதா மாவில் சிறிய உருண்டை செய்து, பூரிப்பலகை மீது வைத்து தேய்த்து நடுவில் சிறிதளவு கொத்துக்கறிக் கலவை வைத்து நீளமாக உருட்டி, ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
  • இது போல் எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ளவற்றை பொரித்து எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA