Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 3198 Likes :
Ingredients
கோழிக்கறித் துண்டுகள் (Boneless) 300 கிராம்
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் அரைத்தது 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் அரை தேக்கரண்டி
சோளமாவு(Corn Flour) 1 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் 3 சிட்டிகை
மிளகுத்தூள்அரைதேக்கரண்டி
முட்டை 1
மைதாமாவு 1 தேக்கரண்டி
சோம்பு அரைதேக்கரண்டி
பொடியாகநறுக்கியபூண்டு 3 பல்
பொடியாகநறுக்கியஇஞ்சி 1 அங்குலம்
பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் 5
காஷ்மீரிமிளகாய்த்தூள் அரைதேக்கரண்டி
கறிபவுடர் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கொத்தமல்லிஇலை 2 மேஜைக்கரண்டி
தயிர் 4 மேஜைக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 500 மில்லிலிட்டர்
Preparation Method
கோழிக்கறித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி—பூண்டு அரைத்தது, பச்சை மிளகாய் அரைத்தது, 1 தேக்கரண்டி சோளமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், முட்டை, மிளகுத்தூள், உப்பு இவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து, தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு கிளறி வதக்கவும்.