Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 3831 Likes :
Ingredients
சேமியா 1 கப்
ரவை 1 கப்
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
நறுக்கிய கேரட் 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
தயிர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
நெய் 1 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை லேஸாக வறுத்து ஒரு பாத்திரத்தில் (Bowl) போட்டுக் கொள்ளவும்.
அதே வாணலியில் ரவையைப் போட்டு லேஸாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
அதே வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, கேரட், பீன்ஸ் இவற்றை போட்டு வதக்கி, இறக்கி ஆற விடவும்.
தயிரை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
தயிருடன் வதக்கிய காய்கறி கலவை, வறுத்து வைத்துள்ள சேமியா, ரவை, உப்பு இவற்றை கலந்து, கிளறி வைக்கவும்.
30 நிமிடங்கள் ஆனபின் தயிர்—சேமியா—ரவை கலவை கெட்டியாக இருந்தால் மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
இட்லி தட்டில் துணி விரித்து, தயிர் கலவையை ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.