Preparation Time: 45 நிமிடங்கள் Cooking Time: 5 டயஸ்
Hits : 7326 Likes :
Ingredients
மாங்காய் 1
கேரட் 1
பச்சை பட்டாணி 50 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பச்சை மிளகாய் 4
பூண்டு 10 பல்
பீன்ஸ் 10
முருங்கைப்பிஞ்சு 2
எலுமிச்சம்பழம் 4
கொத்தவரங்காய் 10
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 2 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
Preparation Method
மாங்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூண்டு, இஞ்சி, 2 எலுமிச்சம்பழம், முருங்கைப்பிஞ்சு, பச்சை மிளகாய், இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைப் பட்டாணியுடன் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மீதமுள்ள எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து விடவும்.
தேவையான உப்புத்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கலந்து ஊற விடவும்.
4 அல்லது 5 நாட்கள் ஊற வேண்டும்.
அதன்பின் கடுகு, பெருங்காயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
தூளாக்கிய பொருட்கள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, கிளறி விடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத் தாளித்து, காய்கறி கலவையுடன் சேர்த்து, நன்றாகக் கிளறி பாட்டில்களில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.