ஷாங்காய் இறால்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 10710
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதியையும், பச்சைப் பகுதியையும் தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அனைத்தும் வதங்கியதும் (சிவக்க வதக்கத் தேவை இல்லை) வெங்காயத் தாளின் வெள்ளைப் பகுதியைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் வினிகர், தக்காளி கெட்சப் சேர்த்து, கிளறவும்.
  • அதன்பின் இறாலை சேர்த்துக் கிளறவும். சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். உப்பு சேர்க்கவும்.
  • இறால் வெந்ததும் கரைத்து வைத்துள்ள கார்ன் ஃளோர் சேர்க்கவும்.
  • வெங்காயத் தாளின் பச்சை நிறப் பகுதியில் பாதி அளவு போட்டு, கிளறவும். 1 நிமிடம் ஆனபின் ஸோயா ஸாஸ் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
  • 2 நிமிடங்கள் ஆனபின் மீதமுள்ள வெங்காயத்தாளின் பச்சைப்பகுதியைப் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA