ஶ்ரீலங்கன் எறா குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7590
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, மிளகு, தேங்காய்த்துறுவல், இவற்றை சிவக்க வறுத்து, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம், பூண்டு, புளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை தோல் நீக்கி, துறுவிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில், மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி துறுவல் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் இறாலைப் போட்டு வதக்கி, தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • இறால் வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA