பட்டாணி புலவு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3067
Likes :

Preparation Method

  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • தேங்காய் துறுவலில் 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பட்டாணியைப் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடங்கள் வதங்கயிதும் தேங்காய்பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போடவும்.
  • நன்றாகக் கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைக்கவும்.
  • சுமார் 15 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA