வெஜிடபிள் புலவு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 15472
Likes :

Preparation Method

  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் இவற்றை சிறு சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • காய்கறிகள், பட்டாணியைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • 5 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டுக் கிளறவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்ததும் நெய், கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA