Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 9069 Likes :
Ingredients
அரிசி 250 கிராம்
எள்ளு 50 கிராம்
மிளகு 1 மேஜைக்கரண்டி
மிகச்சிறிய பூண்டு 6 பல்
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
Preparation Method
அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் பூண்டு வறுத்த நெய், இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சாதம், வறுத்த பூண்டு, வறுத்த எள்ளு, மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கியதும் இறக்கி பரிமாறவும்.