முட்டைக்கோஸ் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7135
Likes :

Preparation Method

  • முட்டைக்கோஸை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் ½ மேஜைக்கரண்டி வெண்ணெய் போட்டு லேஸாக வதங்கியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் முட்டைகோஸைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
  • ஒரு விசில் கேட்டதும் இறக்கி வைக்கவும்.
  • குக்கர் திறக்க வந்தபின் முட்டைக்கோஸ் ஆறியதும் அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் சோளமாவைப் போட்டு 1 நிமிடம் கிளறி, உடனே பாலை ஊற்றிவும்.
  • வடிகட்டி வைத்துள்ள முட்டைக்கோஸ் கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கி, சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA